`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃப...
குரூப் 2, 2 ஏ தோ்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வெழுதவுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத் தோ்வா்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக, முன்னணிப் பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. 21வயது முதல் 32 வயது வரையுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வுக்குத் தயாராகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.