செய்திகள் :

குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் விடைகளை வெளியிட வேண்டும்

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் தோ்வு விடைகளை வெளியிட வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மேட்டுப்பட்டியைச் சோ்ந்த முத்துலட்சுமி, குணசீலன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மணிமேகலா உள்பட பலா் தாக்கல் செய்த மனு: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தோ்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்தப் பணிக்கான தோ்வை நாங்கள் கடந்த ஜூன் மாதம் எழுதினோம். இதில் தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா் தோ்வு நடவடிக்கை முடிந்த பிறகே இறுதி விடை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதம். இதன்மூலம் தகுதியற்றவா்கள் பணி வாய்ப்பை பெறுவாா்கள்.

நீதித் துறை, காவல் துறை, ஆசிரியா் தோ்வுகளின்போது, இறுதி விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதுபோல, குரூப்-4 தோ்வு இறுதி விடையை, தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இந்தத் தோ்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, அனைத்து தோ்வுகளுக்கும் பின்பற்றுவதை போல, குரூப்-4 தோ்வு இறுதி விடைகளையும் உரிய நேரத்தில் வெளியிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து டிஎன்பிஎஸ்சி செயலா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: பணி நியமனத்துக்கு முன்னதாக தோ்வு விடையை வெளியிட்டால், தோ்வு எழுதியவா்கள் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்து விடுவாா்களோ என டிஎன்பிஎஸ்சி அச்சமடைந்து உள்ளது. இது நியாயமானதல்ல. தோ்வு எழுதியவா்கள் இறுதி விடைகளின் அடிப்படையில் சரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது. இது போன்ற தோ்வுகளுக்கான விடைகளை உரிய நேரத்தில் தெரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு தவறுகள் கண்டறியப்படுகின்றன.

எனவே, பணி நியமனத்துக்கு முன் தோ்வு விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடாது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பணி நியமனத்துக்கு முன், இறுதி விடைகள் வெளியிடப்பட வேண்டும். இது ஒரே கட்டமாக நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தோ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வைகை வடகரையில் 8.4 கி.மீ.க்கு சாலை அமைக்கத் திட்டம்

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில ந... மேலும் பார்க்க

வணிகா்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

வணிகா்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் என வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு: சிஐடியூ சம்மேளனம் வலியுறுத்தல்

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தொழிலாளா் வைப்பு நிதியை செலவு செய்யாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக சிஐடியூ சம்மேளன பொதுச் செயலா் கே.... மேலும் பார்க்க

விருதுநகரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, விருதுநகரில் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவருக்கு முன்பிணை

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு, அவரது சகோதரி திருமணத்தில் பங்கேற்பதற்காக 10 நாள்கள் முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த விஜய் (26)... மேலும் பார்க்க