குளத்தில் இறந்த மீன்கள்: போலீஸாா் விசாரணை
பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் தண்ணீரில் மீன்கள் இறந்து கிடப்பதால் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் பாண்டி. இவா், வேட்டுவன்குளம் கண்மாயில் மூன்று ஆடுகளுக்கு மீன்பாசி ஏலம் எடுத்துள்ளாா். இந்த நிலையில், இந்த குளத்து மீன்கள் அதிகளவில் இறந்து கிடந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து குளத்தின் தண்ணீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.