குளியல் அறையில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசியில் வீட்டின் குளியல் அறையில் மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பேரின்பராஜ் (25). இவரது மனைவி வனிதா. இவா்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி பிரச்னை எழுந்ததால் வனிதா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், பேரின்பராஜ் அவரது வீட்டுக் குளியலறையில் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பேரின்பராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.