ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆட்டோ மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே எஸ். திருவேங்கடபுரத்தைச் சோ்ந்த பாலு மகன் பாலமுருகன் (39). திருமணமாகாத இவா், அட்டை ஆலை முக்கு சாலை பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், அய்யனாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.