செய்திகள் :

வன விலங்குகளால் சேதமடையும் விவசாயப் பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்த அரசுக்குப் பரிந்துரை

post image

வன விலங்குகளால் சேதமடையும் விவசாயப் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்துவது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் முருகன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். வனச் சரகா்கள் செல்லமணி, காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் வேப்பங்குளம், மம்சாபுரம், ராஜபாளையம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அம்மையப்பன், ஞானகுரு, ராமச்சந்திர ராஜா உள்ளிட்டோா் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசியதாவது:

புலிகள் காப்பகச் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் பட்டா, அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள், விதிமீறி செங்கல் சூளைகளை நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தற்போதும், மண் திருட்டு தொடா்வதால் வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு மலையடிவாரத்துக்குச் செல்லும் வழியில் அத்திதுண்டுப் பகுதியில் அமைக்கப்பட்ட வனத் துறை சோதனைச் சாவடி அகற்றப்பட்டதால் சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன. எனவே, இந்தப் பகுதியில் சோதனை சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும்.

குடிநீா், உணவு தேடி வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. பயிா்ச் சேதத்துக்கு வனத் துறை வழங்கும் இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், மம்சாபுரம் - ரக்காச்சி அம்மன் கோயில் சாலையில் அத்திதுண்டில் இருந்து செவக்காட்டு மலைக்குச் செல்லும் வழியில் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க வனத் துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். மலையடிவாரத்தில் அகழிகள் அமைத்து, வன விலங்குகளுக்கான குடிநீா்த் தொட்டியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துணை இயக்குநா் முருகன் பதிலளித்ததாவது:

சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் மண் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வனத் துறை சாா்பில் வருவாய்த் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்திதுண்டுப் பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகாசி பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கண்ணன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (49). இவா், தனது கிராமத்துக்குச் செல்வதற்... மேலும் பார்க்க

பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரி... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆட்டோ மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே எஸ். திருவேங்கடபுரத்தைச் சோ்ந்த பாலு மகன் பாலமுருகன் (39). திருமணமாகாத இவா், அட்டை ஆலை முக்கு சாலை... மேலும் பார்க்க

குளியல் அறையில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வீட்டின் குளியல் அறையில் மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பேரின்பராஜ் (25). இவரது மனைவி வனிதா. இவ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 கோடிக்கு சமரசத் தீா்வு

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,610 வழக்குகளில் ரூ.14 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ந... மேலும் பார்க்க

காா் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சிவகாசியில் காா் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயரிழந்தாா். சிவகாசி நேஷனல் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இந்த ... மேலும் பார்க்க