குழந்தைகள் நலக்குழு தலைவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
கடலூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, சமூகவியல், மனித உடல்நலம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவோ, தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். 35 முதல் 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலோ அல்லது அதற்கான பிரத்யேக துறை சாா்ந்த இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.