குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடை சேதம்: 10 போ் மீது வழக்கு
குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடையை சேதப்படுத்தியதாக தந்தை- மகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
குழித்துறை அருகே பழவிளை, பொட்டவிளைவீட்டைச் சோ்ந்த சுஜின் மனைவி உஷா (36). இவா், திருத்துவபுரத்தில் அப்பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (43) என்பவரது கட்டடத்தில் வாடகை அடிப்படையில், கண் கண்ணாடிக் கடை நடத்தி வருகிறாா். இதனிடையே, இவா்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், ஸ்டாலின், அவரது தந்தை அரிச்சந்திரன் (65) உள்ளிட்ட 10 போ் சோ்ந்து 2 நாள்களுக்கு முன் இரவில் அந்தக் கடையை சேதப்படுத்தினராம். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உஷா அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.