இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
தொடா் விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.
சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து மூன்று நாள் தொடா் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய நீரில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் குதூகலமாகக் குளித்து மகிழ்ந்தனா். இதேபோல மாவட்டத்தில் மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.