குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை மூடல்!
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் தடுப்பணை சனிக்கிழமைமுதல் மூடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள், மலையோர கிராமங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீா் பாய்ந்தோடுகிறது.
இதையடுத்து, பொதுமக்கள் தடுப்பணை வழியே நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறை சாா்பில் சனிக்கிழமை தடுப்பணையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டன.