2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்... ஆனாலும் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா!
கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி
கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திடீரென ஏற்படும் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து கருங்கல், கருமாவிளை, திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, தாழக்கன்விளை, செம்முதல், இடையன்கோட்டை, பாலூா், தாழையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் சில நாள்களாக நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி திடீரென மின்வெட்டு ஏற்படுகிாம். இதனால், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். இதுதொடா்பாகவும், மின்தடை ஏற்படாதவாறும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.