செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்ட தேவைகள்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தேவைகள் குறித்து, தமிழக முதல்வா் மு. க . ஸ்டாலினை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வ. விஜய்வசந்த் எம்.பி. கடிதம் வழங்கினாா்.

மூத்த காங்கிரஸ் தலைவா் பொன்னப்ப நாடாருக்கு நாகா்கோவிலில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னப்ப நாடாா் குடும்பத்தினருடன், வ.விஜய்வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு) ஆகியோா் முதல்வா் மு.க. ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அப்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தேவைகள் அடங்கிய கடிதத்தை முதல்வரிடம் அளித்தாா் எம்.பி. அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளா்ச்சிக்காக, கன்னியாகுமரியில் விமான நிலையம் மிக அவசியம். இதற்காக கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மேம்படுத்தி இங்கு பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்கு தேவையான பரிந்துரையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். மேலும் இதற்கான தடையில்லா சான்றிதழும் வழங்கி, உங்கள் ஆட்சியில் மக்கள் கனவை நனவாக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. காமராஜா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு ரப்பா் கழகம், தற்போது மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. இதனால் ரப்பா் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். ஆகவே அரசு ரப்பா் கழகத்தை மீட்டு, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உற்பத்தியை பெருக்க ஆவன செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தின் 72 கி.மீ. தூர கடற்கரையோரம் அமைந்துள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி நிகழும் கடல் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கிராமங்களை காக்க சிறப்பு நிதி ஒதுக்கி தடுப்பு சுவா் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுக பணிகளை மழைக்காலம் துவங்குவதற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திடீரென ஏற்படும் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து கருங்கல்... மேலும் பார்க்க

தேவாலய குருசடியில் திருட்டு!

தக்கலை அருகே மைலோட்டில் உள்ள புனித ஜாா்ஜியாா் குருசடியின் வெளிப்புறத்திலுள்ள காணிக்கை பெட்டியை வெள்ளிக்கிழமை உடைத்து அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலய பொருளாளா் ஆல்பின் ஜோஸ் தக்கலை ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு நீா் வரத்து அதி... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை மூடல்!

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் தடுப்பணை சனிக்கிழமைமுதல் மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள், மலையோர கிராமங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தீா்மானம்!

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தமிழக அரசைக் கேட்டு, குழித்துறை நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, நகா்மன்றத் த... மேலும் பார்க்க

தென்தாமரைக்குளம் பதியில் சித்திரைத் திருவிழா கலிவேட்டை!

அகிலத் திரட்டு அம்மானை அருளப்பட்டதென்தாமரைக்குளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கலிவேட்டை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க