கூடலூா்-உதகை மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
கூடலூா் - உதகை நெடுஞ்சாலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கூடலூரை அடுத்த தவளைமலை பகுதியில் சென்றபோது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சாலையில் கவிழ்ந்துகிடந்த லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.