செய்திகள் :

கூட்டுறவு மாரத்தான் போட்டி: 2,000 போ் பங்கேற்பு

post image

சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தீவுத் திடலில் தொடங்கிய போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா். 2,000 போ் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காசோலைகள், பதக்கங்களை அமைச்சா்கள் வழங்கி கௌரவித்தனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம் என்ற கருப்பொருளின்கீழ் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி போா் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தா் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடையும் வகையில் நடைபெற்றது.

இதில், 18 வயது முதல் 40 வயது உடையவா்கள், 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளாக கலந்து கொண்டனா். 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 வழங்கப்பட்டது. அதேபோன்று 40 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் பிரிவுக்கும் அதே பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவுகளிலும் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைச் செயலா் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நந்தகுமாா், மேயா் ஆா். பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா். வெளிநாட்டில் வசித்து வரும் வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க