தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!’ - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
‘இனி ‘ஏப்ரல் ஒண்ணு’க்கு மேல உங்களுக்கு ராஜயோகம்தான்னார் ராஜேந்திரன்.
‘எப்படி? என்று கேட்டான் கேசவன். ‘ஒருவேளை ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம்கறதினால நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறாரோ?’ என்ற அனுமானத்தில்.
ஏப்ரல் ஒண்ணுல உன் எதிரிகள் கெட்டு இருக்கிற இடம் தெரியாம போயிருவாங்க…! ‘அதனாலதான் அப்படிச் சொன்னேன்! ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்னு!’ என்றார் ராஜேந்திரன்.
மனசு கேக்கலை..! இதை நம்புவதா? வேண்டாமா? ஒரே குழப்பம் உள்ளத்துக்குள்.. தனக்கு ஞானம் கொடுக்கும் குருவாகத் தான் கருதும் சந்துரு என்ன சொல்றான் பார்ப்போம்னு முடிவு பண்ணி அவனிடம் கேட்க, அவன் சொன்னது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
எப்போது மனக்குழப்பம் வந்தாலும், அதற்கு மருந்தும், மார்க்கமும் தருபவன் சந்துருதான்.
அவன் இப்படிச் சொன்னான் :
‘எதுக்கு எதிரி கெட்டு அதில் இன்பம் காணணும்?! ஒருத்தன் கேட்டில் எதுக்கு இன்னொருத்தனுக்கு லாபம்?!

எப்பவுமே… “அறிவு சொல்றதைவிட, இதயம் சொல்றதைக் கேள்..! “அறிவு ஆதாயத்தை மட்டும் சொல்லும்! அது, அடையும் வழியைப்பற்றி யோசிக்காது!., ஆனால், இதயம் சொல்ற வழி இருக்கே… அதுதான் ‘இறைவன் சொல்றவழி! அது ஆதாயத்தைப் பார்க்காது! அன்பைப்பார்க்கும்., அகிலமேன்மை பார்க்கும்! அதுதான் ஆண்டவன் வழி!’ அதனாலதான் நம்ம பெரியவங்க ‘அகம் பிரம்மாஸ் மீ’னாங்கன்னான்!" என்றான்.
ஒன்று ‘பட்டுப்’போய் இன்னொன்றுக்கு வாழ்வு வேண்டாம்!’ ஆண்டவனே! பாரதி சொன்னபடி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒருமைப்பாட்டில் வாழ்வு கிடைக்கட்டும் அது எல்லாருக்கும் நன்மை தரும்படி கிடைக்கட்டும்னு நினைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்!
******
-வளர்கவி
கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.