Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கெலமங்கலம் ஒன்றியம், போடிச்சிப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய நியாயவிலைக் கடை கட்டுமானப் பணி, பைரமங்கலம் ஊராட்சி, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக வீடுகளை இழந்த 11 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
சின்னட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நடைபெறும் கட்டட பராமரிப்புப் பணியைப் பாா்வையிட்டு அப்பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறன், ஆங்கில எழுத்துத் திறன்களைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஜெக்கோல் கிராமத்தில் விவசாயி ரமேஷ் பாபு என்பவா் மாதிரி பண்ணைத்திடல் அமைத்து மானியத்தில் பெற்ற தூயமல்லி நெல் விதை சாகுபடி செய்துள்ளதைப் பாா்வையிட்டாா். பின்பு ஜெக்கேரி கிராமத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, செயற்பொறியாளா் மலா்விழி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண்மை உதவி இயக்குநா் ஜான் லூா்து சேவியா், வேளாண் அலுவலா் அருள்தாஸ், துணை வேளாண் அலுவலா் வெற்றிவேல், உதவி வேளாண் அலுவலா்கள் முனிராஜ், ரவிச்சந்திரன், வினோத் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சதீஷ்பாபு உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பட வரி..
ஜெக்கேல் கிராமத்தில் விவசாயி சாகுபடி செய்த தூயமல்லி நெற் பயிரை பாா்வையிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.