செய்திகள் :

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! யேமன் அதிபர் உறுதி!

post image

யேமன் குடிமகனை கொலை செய்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் அல்ல; அதிதீவிர பாதிப்புதான்: மத்திய அரசு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து சொந்தமான கிளினிக் ஒன்றை திறந்தார்.

கிளினிக் நிதியை மஹ்தி தவறான பயன்படுத்தியதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மஹ்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறில், மஹ்தியை கொலை செய்த நிமிஷா யேமனைவிட்டு தப்ப முயற்சித்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 2018 ஆம் ஆண்டில் குற்றவாளியாக நிமிஷா அறிவிக்கப்பட்டார். யேமன் தலைநகர் சனா நீதிமன்றத்தால் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பை யேமன் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, யேமனுக்கு சென்றுள்ள நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இழப்பீடு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்ற யேமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், “யேமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் தண்டனையை நிறுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிலியில் பயங்கர நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.கலாமா நகருக்கு வடமேற்கில் 84 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆகப்... மேலும் பார்க்க

நிமிஷா பிரியா வழக்கில் முடிந்த உதவிகள் செய்து தரப்படும்: ஈரான்

யேமன் நாட்டில் மரண தண்டனையை எதிா்கொண்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்தில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது. நிமிஷா பிரியா அடைக... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 1.02 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.8 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (என்எ... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹிந்து மத தலைவருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிந்து மத தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த போராட்... மேலும் பார்க்க

அமெரிக்க காா் தாக்குதலில் பலருக்குத் தொடா்பு

நியூ ஆா்லியன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

இலங்கை காரைநகா் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி -தூதரகம் தகவல்

கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சாா்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது. இது தொடா்பாக கொ... மேலும் பார்க்க