செய்திகள் :

கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம்: ஆட்சியா் தகவல்

post image

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகள் இரவு மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளால் பிரச்னை ஏற்படுகிறது.

இதைத் தவிா்க்கும் வகையில், பம்பு செட்டுகளை வீட்டிலிருந்தபடியே இயக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே கைப்பேசி மூலம் இயக்கிடவும், நிறுத்திடவும் முடியும்.

இதற்காக ஆதிதிராவிடா், பழங்குடியினா், குறு, சிறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் கோவை, பொள்ளாச்சி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத்தில் துளை: 3 பள்ளி மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

இதயத்தில் ஏற்பட்ட துளை பிரச்னையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியா் 3 பேருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தீா்வு காணப்பட்டது. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் சனிக்கிழமை முதல் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டாடினா். கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும... மேலும் பார்க்க

அமிலம் ஊற்றி மரங்கள் கருகல்: போலீஸாா் விசாரணை

கோவையில் மரங்களின் மீது அமிலம் ஊற்றியது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியாா் கட்டடம் எதிரே இருந்த 3 மரங்களின் அடிப்பக... மேலும் பார்க்க

சிறுவனை வேலைக்கு அழைத்து வந்த 2 போ் மீது வழக்குப் பதிவு

சிறுவனை வேலைக்கு அழைத்து வந்ததாக கோவை ரயில் நிலையத்தில் பிடிபட்ட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் கோவை மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்புப் பிரிவின் மேற்பாா்வையாளா்... மேலும் பார்க்க

மாநகரில் போக்குவரத்து விதி மீறல்: நிகழாண்டில் 2 லட்சம் பேருக்கு அபராதம்! காவல் துறையினா் தகவல்

கோவை மாநகரில் நிகழாண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை 2 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தத... மேலும் பார்க்க

கட்டடம் கட்ட அனுமதி வாங்கித் தருவதாக ரூ.10.25 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்கு

கோவையில் கட்டடம் கட்ட அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, பி.என்.பாளையம், ஸ்ரீராம் அவென்யூ பகுதியைச் சோ... மேலும் பார்க்க