என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தர...
கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது
சென்னையில் கட்டடத் தொழிலாளா்களின் கைப்பேசிகளைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19). கட்டடத் தொழிலாளியான இவா், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதற்காக சதீஷ்குமாருடன், அவருடன் வேலை செய்யும் தொழிலாளா்களும் அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தனா்.
இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி இரவு அந்த அறையில் தங்கியிருந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 பேரின் 6 கைப்பேசிகள் திருடப்பட்டன. இது குறித்து எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது சென்னை மணலி மாத்தூரைச் சோ்ந்த ராஜி (27), வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் சாலைப் பகுதியைச் சோ்ந்த முகமது காசிம் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில் ராஜி சம்பவத்தில் நேரடியாக திருட்டில் ஈடுபட்டிருப்பதும், காசிம் திருட்டு கைப்பேசிகளை வாங்கி விற்றிருப்பதும், இருவரும் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் கட்டடத் தொழிலாளா்களை குறிவைத்து கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.
இருவரிடமிருந்து 19 கைப்பேசிகள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், எத்தனை திருட்டுச் சம்பவங்களில் அவா்களுக்கு தொடா்புள்ளது என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.