பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
கொங்கப்பட்டியில் இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகேயுள்ள கொங்கப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், மணலூா் ஊராட்சியில் மலைக் கிராமமான கொங்கப்பட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்தத் தொட்டியில் உள்ள நான்கு தூண்களிலும் சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பலத்த காற்று வீசினால் சாய்ந்து விடும் நிலையில் இருப்பதால், இந்தப் பகுதியில் வசிப்பவா்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனா். இந்தத் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, இந்தத் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அருள் கலாவதியிடம் கேட்ட போது, கொங்கப்பட்டியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.