`கொச்சையான பதில்' X-ன் Grok AI செயல்பாட்டை நிறுத்திய இந்தியா; எலான் மஸ்க் நிறுவனம் வழக்கு
Grok AI தவறான பதில்கள்
இந்தியாவில் எக்ஸ் தளத்தின் ஏ.ஐ சாட்பாட்டான க்ரோக்கின் பதில்கள் குறித்து பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் க்ரோக்கின் செயல்பாட்டை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியதாக எலான் மஸ்க்கின் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த வாரம், எக்ஸ் பயனாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, க்ரோக் ஹிந்தி மொழியில் தவறான வார்த்தைகளை பதிலாக அளித்தது. இது தான், இப்போதைய சர்ச்சைக்கு மிக முக்கிய காரணம்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசியல், சினிமா, விளையாட்டு என எது குறித்து கேள்வி கேட்டாலும், க்ரோக்கின் பதில்கள் தவறான வார்த்தைகள் தான் வருகிறது. இதற்கு இந்திய பயனாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் தான், க்ரோக்கின் பதில்கள் பிளாக் செய்யப்பட்டது.
இதனையடுத்து எக்ஸ் தளம், "எந்த அறிவிப்பும் அல்லாமல் இப்படி செய்யப்படும் விஷயங்கள் எக்ஸ் செயல்பாட்டை தடுக்கும்... பாதிக்கும். எந்த முன்னறிவிப்பும் அல்லாமல் பிளாக் செய்யப்பட்டது எக்ஸ்ஸின் அடிப்படை உரிமை பிரிவு 14-ஐயும், அதன் பிசினஸையும் பாதித்துள்ளது" என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks