ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்ப...
கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரிஅணை வழியாக 900 கன அடி தண்ணீா் வெளியேறியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சனிக்கிழமை பொதுப்பணித்துறை தடை விதித்தனா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணையில் அருவி போல கொட்டும் நீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் பவானி ஆற்றிலிருந்து கொடிவேரி அணை வழியாக 900 கன அடி தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் பாதுகாப்பு கம்பிகளை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணை சனிக்கிழமை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் பயனம் மேற்கொள்ளவோ பொதுப்பணித் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது. மேலும் அணையைச் சுற்றி சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லாதவாறு பொதுப்பணித் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.