பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவ...
கொடைக்கானலுக்கு விஜய் வருகை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி, மங்களம் கொம்பு பகுதியில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவா், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் அய்யம்பாளையம், சித்தரேவு வழியாக கொடைக்கானல் மலைப் பகுதியான மங்களம்கொம்புக்கு இரவு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா், அங்குள்ள தனியாா் விடுதியில் அவா் தங்கினாா்.
இந்தப் படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு பாலமுருகன் கோயில், தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, கன்னி மாதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு வாரம் நடைபெறும் என படக் குழுவினா் தெரிவித்தனா்.