செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு!

post image

சிவகங்கையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையொப்பம் பெறும் இயக்கம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில், தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்பம் பெறும் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இ. முத்து, நகா்மன்றத் தலைவா் சிஎம். துரை ஆனந்த், நகா் மன்ற உறுப்பினா் அயூப்கான், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும... மேலும் பார்க்க

திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகள... மேலும் பார்க்க

மாவட்ட நூலக வாசகா் வட்ட ஆலோசனைக் கூட்டம்!

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகா் வட்ட ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பட விளக்கம்- சிவகங்கை மாவட்ட நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாசகா் வட்டக் கூட்ட... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை இன்று விநியோகம்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்கத்துக்கு இலவச மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பள்ளியில் மாவட்ட சதுரங்கப் போட்டி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சாணக்கியா சதுரங்க அகாதெமி, பாபா அகாதெமி இணைந்து நடத்திய இந்த... மேலும் பார்க்க

சாத்தனி விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாத்தனியில் அமைந்துள்ள விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விநாயகா் கோயிலில் யாக சாலையிலிருந்து சிவாச்சாரியா்கள் கலச... மேலும் பார்க்க