2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை இன்று விநியோகம்!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்கத்துக்கு இலவச மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (பிப். 10) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி திங்கள்கிழமையும், விடுபட்டவா்களுக்கு வருகிற 17-ஆம் தேதியும் குடற்புழு நீக்க இலவச மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இதன்படி, மாவட்டத்திலுள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,77,552 பயனாளிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 87,625 பெண்களுக்கும் என மொத்தம் 4,65,177 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் வீடுகளுக்குச் சென்று இந்த மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.