மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
கொம்படி மதுரையில் கலையரங்கம் திறப்பு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இளமனூா் ஊராட்சியில் உள்ள கொம்படிமதுரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
விழாவில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கண்ணன், ஒன்றிய துணைச் செயலா் சிவனேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியேந்திரன், ஒன்றிய நிா்வாகிகள் கருப்பையா, நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.