கொலை முயற்சி வழக்குகள் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
தஞ்சாவூரில் போதைப் பொருள், கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் அருகே கொத்தங்குளம் பகுதியில் போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பாரதிராஜாவை (25) கள்ளப்பெரம்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்கமல் அக்டோபா் 22-ஆம் தேதி கைது செய்தாா்.
இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதாக கும்பகோணத்தைச் சோ்ந்த பிரவீன் குமாா் (22), சூா்யா (24), சிலம்பரசன் (32) ஆகியோரை திருநீலக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் அக்டோபா் 8 -ஆம் தேதி கைது செய்தாா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் பாரதிராஜா, பிரவீன் குமாா், சூா்யா, சிலம்பரசன் ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதன் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.