செய்திகள் :

கொலையாளியுடன் செட்டிங்? - கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

post image

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெயராமன். இவருக்கு நியூட்டன், பெனிட்டோ என்பவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் ஜெயராமன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக, தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தந்துள்ளனர். ஆனால் ஜெயராமன் கடனை செலுத்தாமல், நண்பர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுந்த மோதலில், திருநெல்வேலியை சேர்ந்த முருகப்பெருமாள் உதவியுடன் ஜெயராமனை கொலை செய்துள்ளனர்.

பிறகு கோவையில் உள்ள பாலமுருகன் என்பவர் மூலம், ஜெயராமன் உடலை, செட்டிப்பாளையம் அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். சுமார் 50 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் சரணடைந்தனர்.

கொலை
கொலை

இதனடிப்படையில் காவல்துறையினர் கிணற்றில் இருந்து ஜெயராமனின் எலும்புகளை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூட்டன், பெனிட்டோ, முருகப்பெருமாள், பாலமுருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் திடீர் திருப்பமாக மேலும் சில அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காவல்துறை விசாரணையில், சூலூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டராக உள்ள லெனின் அப்பாதுரை இந்த சம்பவத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லெனின் அப்பாதுரையை சஸ்பெண்ட் செய்து கோவை சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட்

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இந்த கொலை சம்பவம் தொடர்பாக லெனின் அப்பாதுரைக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்துள்ளது. அவர் உண்மையான கொலையாளியை தப்பிக்க வைப்பதற்காக, இந்த வழக்குக்கு சம்மந்தம் இல்லாத ஒருவரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில... மேலும் பார்க்க

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்... மேலும் பார்க்க

மும்பை: வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது வங்கதேச சிறுமி; 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர். இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்த... மேலும் பார்க்க

கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர். ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க