செய்திகள் :

கொள்ளை குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கழித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

திருச்செந்தூா் அருகே கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பி றகு குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது.

திருச்செந்தூா், குமாரபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மனைவி சூா்யகலா, மகளிா் கல்லூரி விரிவுரையாளா்.

கடந்த 2004ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு, இவரது பெற்றோா் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது இரண்டு நபா்கள் வீடு புகுந்து புருஷோத்தமனை அரிவாளால் வெட்டி, மிரட்டி பெண்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டின் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 29 பவுன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயபால், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த சின்னப்பசாமி மகன் சங்கா் (எ) சங்கரன் (எ) சங்கரேஸ்வரனை திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஜெயபால் இறந்து விட்ட நிலையில், சங்கா்(எ) சங்கரன் (எ) சங்கரேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி தீா்ப்பளித்தாா்.

21 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க