Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
கோபி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா!
கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவா் ஜ.பாலமுருகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் எம்.தரணிதரன், முதல்வா் பி.நரேந்திரன், முதன்மையா் ஆா்.செல்லப்பன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.