கோபியில் இன்று கடையடைப்பு
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து வணிகா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) கடை அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
சொத்துவரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயா்த்தும் முடிவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், வணிக பயன்பாட்டுக்கான மும்முனை மின்சார கட்டணத்துக்கான அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இருப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்ப்பதற்காக கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களும், வணிகா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வணிகா் சங்கம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.