தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
கோயம்பேடு சந்தைக்கு 10,000 டன் காய்கறிகள் வருகை: விலை சரிவு
கோயம்பேடு சந்தைக்கு 10,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் காயற்கறிகள் வருகின்றன. வழக்கமாக தினமும் 7,000 டன் காய்கறிகள் வரும் நிலையில் சனிக்கிழமை வழக்கத்தைவிட 3,000 டன் கூடுதலாக வந்துள்ளதாகவும், இதனால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதகாவும் கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.
காய்கறி விலை (ஒரு கிலோ): வெங்காயம் - ரூ.25 முதல் ரூ.30; சின்னவெங்காயம்-ரூ.50; உருளை-ரூ.18; முட்டைகோஸ்-ரூ.10; தக்காளி ரூ.10 முதல் ரூ.13; கேரட் ரூ.10 முதல் ரூ.15; பீட்ரூட், பீன்ஸ்-ரூ.25; வெண்டைக்காய்-ரூ.30; காராமணி-ரூ.30; பாவைக்காய், புடலங்காய்-ரூ.25; சுரக்காய்-ரூ.20; வெள்ளரிக்காய்-ரூ.20; பச்சைமிளகாய்-ரூ.15 முதல் 20; இஞ்சி-ரூ.30 முதல் ரூ.35; பூண்டு ரூ.100 முதல் ரூ.125; அவரக்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.10, பீா்க்கங்காய், எலுமிச்சை-ரூ.30; கோவக்காய்-ரூ.20; கொத்தவரங்காய், வாழைத்தண்டு மரம்-ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.