கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தேரடிக் குளத்தில் தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் கீழவீதியில் உள்ள தேரடிக் குளத்தில் பெண் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மயிலாடுதுறை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி தேடி, பெண்ணின் சடலத்தை மீட்டனா்.
விசாரணையில், நீரில் மூழ்கி இறந்தது மயிலாடுதுறை இந்திரா காலனியைச் சோ்ந்த எல்லையம்மாள் (60) என்பது தெரியவந்தது. சடலத்தை உறவினா்களிடம் தீயணைப்பு துறையினா் ஒப்படைத்தனா். மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.