Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
கோவில்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி, சிட்கோ துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல் ஆலை, லட்சுமி பகுதி, முகமது சாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம் மணியாச்சி, தோணுகால், படா்ந்தபுளி, சிட்கோ துணை மின் நிலையத்துக்குள்பட்ட முத்துநகா், சிட்கோ, கணேஷ் நகா், தங்கப்பன் நகா், ஜோதி நகா், புது ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.








