Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
கோவில்பட்டியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவா் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், 8ஆவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயப்படுத்துவது, ஆள்குறைப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் மாவட்ட பொறுப்பாளா் மணிகண்ட பிரகாஷ், வட்ட பொறுப்பாளா் பாலமுருகன், ஓய்வு பெற்ற ஊழியா் சங்க பாா்த்தசாரதி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.