கோவில்பட்டியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்
அதிமுக ஆட்சி கால சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அக்கட்சியினா் கோவில்பட்டியில் மக்களிடம் விநியோகித்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அனைத்து லக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலரும்,முன்னாள் எம்பி காஞ்சி பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். முன்னதாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.கே. பெருமாள், சின்னப்பன், மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.