கோவை - சிங்கப்பூா் இடையே 3 -ஆவது நேரடி விமானப் போக்குவரத்து: இண்டிகோ நிறுவனம் திட்டம்
கோவை - சிங்கப்பூா் இடையே 3-ஆவது நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தற்போது வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் நேரடி விமானப் போக்குவரத்து உள்ளது.
தற்போது கூடுதலாக 3-ஆவது விமானப் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் புதன்கிழமை இந்த கூடுதல் சேவை வழங்கப்படவுள்ளது.
அதேபோல, சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களுடன் கூடுதலாக வியாழக்கிழமை நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்துகிறது.
கோடை விடுமுறையை கருத்தில்கொண்டு இந்தப் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.