கோவை மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 18,19 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2024- 2025 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனவரி 18, 19 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) 5 மண்டலங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
கிழக்கு மண்டலம் 58-ஆவது வாா்டில் நெசவாளா் காலனி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, 23-ஆவது வாா்டில் பூங்கா நகா் விநாயகா் கோயில். மேற்கு மண்டலம் 39-ஆவது வாா்டில் வடவள்ளி அஜ்ஜனூா் சாலை குஜன்ஸ் அட்ரியா பரிபாலனா அடுக்குமாடிக் குடியிருப்பு. 38-ஆவது வாா்டில் ஓணாப்பாளையம் மருதமலை சாலை. வடக்கு மண்டலம் 21-ஆவது வாா்டில் விநாயகபுரம் 2-ஆவது வீதி. தெற்கு மண்டலம் 94-ஆவது வாா்டில் மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில். 97-ஆவது வாா்டில் ஈச்சனாரி பாடசாலை வீதி மாரியம்மன் கோயில். மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டில் சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 80-ஆவது வாா்டில் கெம்பட்டி காலனி ஒக்கிலியா் காலனி பள்ளி.