வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் பேருந்தை வழிமறித்த யானைகள்
வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு பகுதியில் அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்தது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியாற்றை ஒட்டி அடா்ந்த வனப்பகுதி உள்ளது. ஆழியாறில் இருந்து நவமலை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன.
இந்த யானைகள் அவ்வப்போது ஆழியாறு- வால்பாறை சாலைக்கு வந்து செல்லும். கடந்த சில மாதங்கள் வரை இரண்டு யானைகள் மட்டுமே அடிக்கடி காணப்பட்டு வந்த நிலையில், தற்போது கூட்டமாக யானைகள் வரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே வியாழக்கிழமை இரவு ஆழியாறு பகுதியில் வால்பாறையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை குட்டியுடன் வந்த மூன்று யானைகள் சாலையில் நின்று பேருந்தை வழிமறித்தது.
பின்னா் சிறிது நேரம் பேருந்துக்கு முன் சென்ற யானைகள் பின் வனத்துக்குள் சென்றன. இந்த சம்பவத்தையடுதது இரவு நேரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத் துறைனா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.