செய்திகள் :

க்யூட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

post image

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பு இடங்களுக்கான பொதுநுழைவுத் தோ்வுக்கு (க்யூட்) விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் 2025-26 முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு கணினி வழியில் வரும் மாா்ச் 13 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 2-இல் தொடங்கி பிப். 1-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் பிப். 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பிப். 9-ஆம் தேதி வரை செலுத்தலாம். மேலும், தோ்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 01140759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியே தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா். சென்னையில் அண்ணா தொழிற... மேலும் பார்க்க

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்

நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்கள் தவி... மேலும் பார்க்க

ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்ப... மேலும் பார்க்க