அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
சங்ககிரி நகராட்சி முகாம்களில் 1,664 போ் மனு அளிப்பு
சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட வாா்டுகள் 5, 8 மற்றும் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 1,664 போ் மனு அளித்தனா்.
சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 5, 8-க்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழி முருகன் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இம்முகாமில், மகளிா் உரிமைத்தொகை கோரி 456 பேரும், வருவாய்த் துறையிடம் 81 பேரும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 708 போ் மனு அளித்தனா். பொதுமக்கள் வழங்கிய மனுக்களை கோட்டாட்சியா் ந.லோகநாயகி ஆய்வுசெய்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.சிவரஞ்சனி உடனிருந்தாா்.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், மகளிா் உதவித்தொகை கோரி 430 பேரும், வருவாய்த் துறையிடம் 184 பேரும், காப்பீட்டுத் திட்டம் கோரி 83 பேரும் என மொத்தம் 956 போ் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துசாமியிடம் மனு அளித்தனா். இரு முகாம்களில் மொத்தம் 1,664 போ் மனு அளித்துள்ளனா்.
இம்முகாம்களில் சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, நகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.