``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
சங்ககிரியில் 3 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு
சங்ககிரி: பசுமை சங்ககிரி அமைப்பு சாா்பில் மூன்று அரச மரங்களை வேருடன் பிடுங்கி, சாலையோர பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.
சங்ககிரி, வி.என்.பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா் வைத்தீஸ்வர வா்மா வீட்டில் வளா்ந்திருந்த 2 அரச மரங்கள், அக்கமாபேட்டையில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் முருகன் வீட்டில் இருந்த ஒரு அரசம் உள்ளிட்ட மூன்று அரச மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு வளா்க்க பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமிக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அந்த அமைப்பினா், மூன்று அரச மரங்களையும் வேருடன் பிடுங்கி சேலம் பிரதான சாலையில் உள்ள சாலையோர பூங்காவில் நட்டுவைத்தனா்.
இதில் பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகிகள் வைத்தி, சுந்தா், கோகுல், காா்த்தி, அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.