சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு!
சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சங்ககிரி, எடப்பாடியில் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009 ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி போலீஸாா் அத்துமீறி நுழைந்து தாக்கிய செயலைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் அந்நாள் கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்டுவதையொட்டி, சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சங்ககிரி, எடப்பாடியில் உள்ள நீதிமன்றங்களில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.