Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும...
சங்கரன்கோவில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும்: எம்எல்ஏ தகவல்
சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாக எம்எல்ஏ ஈ. ராஜா கூறினாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நான் (ஈ. ராஜா எம்.எல்.ஏ.) பேசுகையில், சங்கரன்கோவில் பகுதியில் வாகன நெருக்கடி அதிகமாகி வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகின்றது. எனவே, புறச்வழிச்சாலை அமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். நில எடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பின் திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்து இந்த நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி தரப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா் என்றாா் எம்எல்ஏ.