கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!
சங்கா், ஷ்ரியன்ஷி வெற்றி
கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சங்கா் முத்துசாமி, ஷ்ரியன்ஷி வலிஷெட்டி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், சங்கா் முத்துசாமி 23-21, 21-12 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சக இந்தியரான ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தினாா்.
மகளிா் ஒற்றையரில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 21-18, 22-20 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் பாலினா புரோவாவை தோற்கடித்தாா்.
எனினும், தான்யா ஹேம்நாத் 21-15, 22-24, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் சங் ஷுவோ யுன்னிடம் தோல்வி கண்டாா். ஐரா சா்மா 9-21, 14-21 என பல்கேரியாவின் கலோயனா நல்பன்டோவாவிடம் வீழ்ந்தாா்.
கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ இணை 15-21, 19-21 என, ஸ்பெயினின் ரூபன் காா்சியா - லூசியா ரோட்ரிகஸ் கூட்டணியிடம் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டது.