மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
சட்ட விரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது
கோவில்பட்டி: கயத்தாறில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு உதவிக் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் எதிரே உள்ள திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது . இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கயத்தாறு சக்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் உச்சிமாகாளியை (48) கைது செய்தனா் . அவரிடம் இருந்த 22 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.1100, பைக்கையும் பறிமுதல் செய்தனா்.