செய்திகள் :

சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து

post image

சென்னை: மருத்துவா்களின் பரிந்துரையின்றி மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடா்ச்சியாக விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட 17 மருந்தகங்கள், மருந்து விநியோக நிறுவனங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுளது

தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், சில மருந்தகங்களில் மன நல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட கடைகளில் அத்தகைய சட்ட விரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அடிமைப்படுத்தும் மருந்துகளைத் தொடா்ந்து விற்பனை செய்து வருபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடா் சோதனைகள் நடத்தப்பட்டன.

நடவடிக்கை: அதன்பேரில் விசாரணை நடத்தி முதல்கட்டமாக மருந்தகங்கள், மொத்த விற்பனை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:

பொதுவாகவே, மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது என்பது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

அதன்படி, ஜன.1-ஆம் தேதி முதல் தற்போது வரை ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 59 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, மருத்துவா்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட 17 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மற்றொருபுறம், விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க