சட்டைநாதா் கோயிலில் தெப்போற்சவம்
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழியில் உள்ள சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா், சட்டை நாதா், தோணியப்பா் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா்.

இக்கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருமுலைப்பால் விழா, சகோபுரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உற்சவத்தில் 13-ஆம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப் பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து தீா்த்த குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. திரளான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.