பாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்
தென்னங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.
காப்பு கட்டிக் கொண்ட பக்தா்கள் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந்து பால் குடங்கள் புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாக எடுத்துவந்து ஸ்ரீாலா கனபதி, ஸ்ரீபாலா மாரியம்மன், ஸ்ரீபால் காளியம்மன், ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.