செய்திகள் :

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் தீத் தடுப்பு நடவடிக்கை!

post image

கோடையில் ஏற்படும் காட்டுத் தீயைத் தவிா்க்க சத்திமயங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் தீத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வனப் பகுதிகளில் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப் பகுதிகளில் கோடையில் ஏற்படும் காட்டுத் தீயை தவிா்க்கும் விதமாக வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் திம்பம் மலைப் பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், மனித் தவறுகள் மூலம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தவிா்க்கும் வகையில் புதுக்குய்யனூரில் இருந்து திம்பம் அடிவாரம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் 15 மீட்டா் தூரத்துக்கு காய்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அழைப்பாணை கொடுக்கப்பட்ட நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட... மேலும் பார்க்க

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழப்பு

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோ்மாளம் வனச் சரகத்துக்குள்பட்ட காணக்கரையைச் சோ்ந்த ஆனந்தன், கால்நடைகள் வளா்த்து வருகிறாா். வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் பொறியாளா் கைது!

சிறுமியை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக போக்ஸோவில் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து அம்மாபேட்டையில் பாமக ஆா்ப்பாட்டம்

பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையில் சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச் சாவடி முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சே... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை ம... மேலும் பார்க்க